×

படிபடியாக உயரும் பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல் லிட்டருக்கு 9 காசுகள் அதிகரிப்பு

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் படி  இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 காசு அதிகரித்து , ஒரு லிட்டர் ரூ.78.48-ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.39-ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.     

நாடு முழுவதும் மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறையில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை அதிரடி மாற்றங்களை கண்டு வந்தது. அதாவது சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு பெருமளவு அதிகரித்து விடுகிறது. தொடர்ந்து அதிரடி ஏற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags : Increase,gasoline,diesel prices, 9%
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...