×

சைக்கிள் போலோ: தமிழகத்துக்கு வெண்கலம்

சென்னை: சப்-ஜூனியர் சிறுமிகளுக்கான தேசிய சைக்கிள் போலோ போட்டியில் தமிழக அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் தேசிய அளவிலான 17வது சப்-ஜூனியர் சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப்  போட்டி
நடந்தது. சிறுமிகளுக்கான இந்த போட்டியில் பங்கேற்ற தமிழக அணி அரையிறுதி வரை முன்னேறியது.அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த தமிழக அணி, 3வது இடத்துக்கான போட்டியில் மேற்கு வங்க அணியை எதிர்த்து விளை யாடியது. அதில் 8-5 என்ற கோல் கணக்கில் வென்று 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.தமிழக அணி சார்பில்  அமிர்தா பிரியா 4, மோகனா 2, கலைகாவியா, விஷ்ணுப் பிரியா தலா ஒரு கோல் அடித்தனர்.

Tags : Tamil Nadu ,Bronze , Bicycle Polo, Bronze, Tamil Nadu
× RELATED நாடு முழுவதும் உள்நாட்டு...