×

டேபிள் டென்னிஸ்: எஸ்ஆர்எம்ஐஎஸ்டி சாம்பியன்

சென்னை: தென் மண்டல அரசு பல்கலைக்கழகங்கள், தனியார் நிகர்நிலை  பல்கலைக்கழகங்களுக்கு   இடையிலான பெண்கள் டேபிள் டென்னிஸ் போட்டி  விஜயவாடாவில் நடந்தது. எஸ்ஆர்எம்ஐஎஸ்டி நிறுவனம் இறுதி போட்டியில் தெலங்கானாவின்  உஸ் மானியா   பல்கலைக்கழகத்தை 3-2 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.
* தமிழ்நாடு  பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் டேபிள் டென்னிஸ் போட்டி   ராமச்சந்திரா உயர்கல்வி   ஆராய்ச்சி நிறுவனத்தில்   நடந்தது. இதில் எஸ்ஆர்எம்ஐஎஸ்டி முதலிடத்தை   பிடித்தது. அண்ணா  பல்கலைக்கழகம் 2வது இடமும்,  சென்னை
பல்கலைக்கழகம்  3வது இடமும் பிடித்தன. முதல் 3 இடங்கள் பிடித்த இந்த அணிகளுக்கு  தமிழ்நாடு விளையாட்டு  மேம்பாட்டு ஆணையம்  (எஸ்டிஏடி) சார்பில் முறையே 10,000, 7,500, 5,000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

Tags : SRMIST Champion , Table Tennis, SRMIST Champion
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு