×

இன்று மதியம் 12 மணி வரை மாரத்தானில் பங்கேற்பவர்களுக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச பார்க்கிங்: நிர்வாகம் தகவல்

சென்னை: மாரத்தான் போட்டியை முன்னிட்டு இன்று அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மதியம் 12 மணி வரை மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பாளர்களுக்கு இலவச பார்க்கிங் சேவையை நிர்வாகம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து இன்று  சென்னை மாரத்தான் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மாரத்தானில் பங்கேற்கும் நபர்களை ஊக்குவிக்கும் விதமாக காலை 6 மணிக்கு பதில் அதிகாலை 3 மணி முதலே மெட்ரோ ரயில் சேவை இயங்கும். இதேபோல், அதிகாலை 3 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்துமிடங்களை பங்கேற்பாளர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்குகிறது.

அனைத்து ஓட்டப்பந்தயங்களும் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இருந்து தொடங்கும். 10 கி.மீ ஓட்டப்பந்தயம் தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரிக்கு அருகில் முடிவடையும். மற்ற ஓட்டப்பந்தய பிரிவுகள் கிழக்கு கடற்கரை சாலையில் முடிவடையும். அனைத்து மாரத்தான் ஓட்டங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை தொடங்கும். இந்த சென்னை மாரத்தான் ஓட்டம் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கழிபட்டூர் ஏரியை தூர்வாரி செப்பனிடும் பணிக்காக நடத்தப்படுகிறது. மாரத்தான் 10 கி.மீ, 21 கி.மீ, 32 கி.மீ மற்றும் 42 கி.மீ என நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : stations ,Metro ,participants ,Administration ,Marathon , Metro stations, free parking, administration
× RELATED பதற்றமான வாக்குசாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு