×

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 243 மாவட்ட கவுன்சிலர் இடங்களை பிடித்தது திமுக: 2099 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றியது

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் 243 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும், 2099 ஒன்றிய கவுன்சிலர் இடங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழகம் முழுவதும் மொத்தமாக 91,975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. பதிவான வாக்கு எண்ணும் பணி 2ம் தேதி தொடங்கி 3ம் தேதி இரவு வரை நீடித்தது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 513 இடங்களுக்கான முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக அதிகபட்சமாக 243 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும், அதிமுக 214 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் 22 இடங்களையும், பாஜ, இந்திய கம்யூனிஸ்ட் தலா 7 இடங்களையும், தேமுதிக 3 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மற்ற கட்சிகள் 22 இடங்களை கைப்பற்றியுள்ளன.

5090 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 5085 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக 2099 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக 1781 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் 131 இடங்களையும், தேமுதிக 91 இடங்களையும், பாஜ 85 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 62 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 33 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மற்றவர்கள் 795 இடங்களை கைப்பற்றியுள்ளனர். காங்கிரஸ் 131 இடங்களையும், தேமுதிக 91 இடங்களையும், பாஜ 85 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 62 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 33 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

Tags : Lok Sabha ,District Councilor ,DMRC , Rural Local Elections, Results, 243 District Councilor, DMK, 2099 Union Councilor
× RELATED ஸ்டிராங் ரூம் சிசிடிவி கேமராக்களில் கோளாறால் பரபரப்பு!