×

மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் நேற்று சந்தித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பின்னர், திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். 8ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தில் விசிக தொழிற்சங்கமும் பங்கேற்கிறது. இவ்வாறு கூறினார்.  


Tags : MK Stalin Thirumavalavan ,MK Stalin , MK Stalin, Thirumavalavan, meet
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...