×

இந்தியாவில் நடந்த தாக்குதலிலும் சுலைமானிக்கு தொடர்பு இருந்தது: டிரம்ப் பகீர் தகவல்

வாஷிங்டன்: சுலைமானி கொல்லப்பட்டது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈராக்கில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அமெரிக்கர் ஒருவர் பலியானார். 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடந்த தாக்குதல், சுலைமானியின் உத்தரவால் நடத்தப்பட்டது. பல அப்பாவி மக்களின் மரணத்துக்கு அவர் காரணமாக இருந்தார். இந்தியா, இங்கிலாந்தில் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களிலும் சுலைமானியின் பங்களிப்பு இருந்தது. அவரது தீவிரவாத ஆட்சி முடிந்து விட்டது.  

மத்திய கிழக்கு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக தீவிரவாதத்தை தூண்டி நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியவர் சுலைமானி. அமெரிக்கா நேற்று முன்தினம் செய்ததை, வெகு காலத்துக்கு முன்பே செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், ஏராளமான அப்பாவிகளின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும். ஈரானில் நடந்த போராட்டத்தில் சுலைமானி அடக்குமுறையை கையாண்டார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர்.
சுலைமானியின் மரணத்தால் போர் ஏற்படாது. போரை நிறுத்தத்தான் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

சுலைமானியின் தலைமையின் கீழ் ஈரானின் இஸ்லாமிக் புரட்சிகர பாதுகாப்பு  படையும், குத்ஸ் படையும், அமெரிக்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின. நாங்கள் அவரை கொன்றுள்ளோம். அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தீவிரவாதிகளை நாங்கள் தொடர்ந்து கொல்வோம். எனது தலைமையின் கீழ் அமெரிக்க ராணுவம் ஐஎஸ் தலைவன் அல்-பாக்தாதியை கொன்றுள்ளது. இப்போது, சுலைமானி கொல்லப்பட்டு உள்ளான். இந்த அரக்கர்கள் இன்றி உலகம் இனி பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

Tags : attack ,Suleimani ,India ,Trump , India, Attack, Suleiman, Communication, Trump, Info
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...