×

உபி. மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதாக இம்ரான் வெளியிட்ட டுபாக்கூர் வீடியோ: ஆதாரத்துடன் நிரூபித்ததால் நீக்கம்

புதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது டிவிட்டர் வீடியோவை அவசர, அவசரமாக நீக்கி உள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டிருந்தார். அதில் போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தும் காட்சி இருந்தது. அந்த வீடியோவுக்கு ‘உ.பி முஸ்லிம்கள் மீது இந்திய போலீசாரின் தாக்குதல்’ என அவர் தலைப்பு கொடுத்திருந்தார். ஆனால், அந்த வீடியோ வங்கதேசத்தில் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின்போது அந்நாட்டு அதி விரைவுப்படை போலீசார் நடத்திய தாக்குதல் காட்சியாகும்.

அவர்களின் சீருடையில் ‘ஆர்.ஏ.பி’ என தெளிவாக தெரிகிறது. அந்த வீடியோவில் வங்கமொழி பேசப்படுகிறது. இந்த வீடியோவை இம்ரான் கான் உள்நோக்கத்துடன் வெளியிட்டதாக கருதப்படுகிறது. இதை இந்திய வெளியுறவுத்துறை அம்பலப்படுத்தியதை அடுத்து, அந்த வீடியோவை இம்ரான்கான் நீக்கிவிட்டார். இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார், ‘பொய் செய்தியை டிவிட்டரில் வெளியிடுதல், சிக்குதல், டிவிட் தகவலை அழித்தல் ஆகியவை தொடர்கிறது,’ என்ற வாசகத்தை ‘பழைய பழக்கங்கள் இன்னும் ஒழியவில்லை’’ என்ற ஹேஸ்டேக்குடன் வெளியிட்டார்.

Tags : UP ,Imran , UP. People, police beard, Imran, dubakur video
× RELATED ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில்...