×

இந்தோனேஷியா வெள்ளம் பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு: 1.70 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம்

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியாவில் கடந்த புத்தாண்டு தினத்தன்று முதல் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் ஜகார்த்தாவிலும், அதன் அருகிலுள்ள லெபாக், பெகாசி நகரங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் குழந்தைகள், பெண்கள் உள்பட 1.7 லட்சம் பேர் முகாம்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் வடிந்த ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மின் இணைப்பு மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், `வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. குடியிருப்புகளின் 2வது மாடி வரை வெள்ள நீர் தேங்கியுள்ளது என்று இந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளம் காரணமாக காலரா, டைபாய்ட், டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால், 11,000 மீட்புப் படையினரை மருத்துவ, உணவு உதவிகள் வழங்க இந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

Tags : floods ,Indonesia , Indonesia, floods, death toll, increase, 1.70 lakh people, camp, asylum
× RELATED இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி