×

குழந்தைகள் பலி 107 ஆக உயர்வு ராஜஸ்தானுக்கு சென்றது மத்திய அரசு மருத்துவ குழு

கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளின் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. அங்கு எய்ம்ஸ் டாக்டர்கள் அடங்கிய மத்திய அரசு குழு ஆய்வுக்காக சென்றுள்ளது. ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ளது ஜே.கே.லோன் அரசு மருத்துவமனை. இங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தொற்றுநோய் பரவல் காரணமாக, ஒரு மாதத்துக்குள் குழந்தைகளின் பலி எண்ணிக்கை 107 ஆக அதிகரித்தது. இந்நிலையில் அங்கு கட்டமைப்பு வசதிகளை ஆராயவும், இனி ஏற்படும் உயிர்பலிகளை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவும், ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள், சுகாதார பொருளாதர நிபுணர்கள் அடங்கிய மத்தியக் குழு கோட்டா சென்றுள்ளது. இங்கு கட்டமைப்புகளை மேம்படுத்த எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை சுகாதார பொருளாதார நிபுணர் குழு முடிவு செய்யும். கோட்டா தொகுதி எம்.பி.யான மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவும் கோட்டா சென்று, பலியான குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து பேசினார்.

Tags : Children ,Rajasthan Children ,Rajasthan , Children killed, raised, Rajasthan, central government, medical board
× RELATED ராஜஸ்தான் கோட்டாவில் சிவராத்திரி...