×

வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்து: ஜி.கே.வாசன்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்றவர்களுக்க தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமாகா சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் 23 பேர் வெற்றிப்பெற்று உள்ளனர். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட இடங்களில் தஞ்சாவூர்- 3, மதுரை-1, திருச்சி-2, சேலம்-1, சிவகங்கை-3, கடலூர்-5, கரூர்-1, திருப்பூர்-3, ஈரோடு- 1, திருவாரூரில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் 3 பேர் வெற்றிப்பெற்றுளள்னர். தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு தமாகா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றிப்பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : GK Vasan ,winners , Winner, Greet, GK Vasan
× RELATED தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு...