×

வி.பி.கலைராஜன் ஏற்பாட்டில் இன்று திமுகவில் 10,000 பேர் இணையும் விழா: மு.க.ஸ்டாலின், உதயநிதி பங்கேற்பு

சென்னை: சென்னை தி.நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், திமுக இலக்கிய அணி இணை செயலாளருமான வி.பி.கலைராஜன் ஏற்பாட்டில் 10,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி “உற்சாக திருவிழா” என்ற பெயரில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ முன்னிலை வகிக்கிறார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆரத்தழுவுகிறார். முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன் வரவேற்புரையாற்றுகிறார். இதில், திமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பிற அணி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வி.பி.கலைராஜன் செய்து வருகிறார்.

Tags : Kalairajan ,Udayanidhi ,MK Stalin ,DMK , VP Kalirajan, Today DMK, 10,000 people, Joining Ceremony, MK Stalin, Udayanidhi, Participation
× RELATED நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர்...