×

தெலங்கானாவில் மாதிரி வாக்காளர் பட்டியலில் எல்கேஜி படிக்கும் 3 வயது சிறுமியின் பெயர் சேர்ப்பு

கரிம்நகர்: தெலங்கானா மாநிலத்தில் வெளியிடப்பட்ட மாதிரி வாக்காளர் பட்டியலில் எல்கேஜி படிக்கும் 3 வயது சிறுமியை சேர்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில்  விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மாநில தேர்தல் அதிகாரிகள் மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

அதில் கரீம்நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகளான 3 வயது சிறுமி நந்திதாவின் பெயர், புகைப்படம் இருந்துள்ளது. அதில் நந்திதா 35 வயது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ்  தேர்தல் அதிகாரியிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.

Tags : LKG ,Telangana , Telangana
× RELATED பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் இன்றைய சொத்து மதிப்பு பூஜ்யம்