×

நாமக்கல்லில் ஆசிட் வீச்சில் காயமடைந்த காவலர்கள் இருவருக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வர் நிதியுதவி

சென்னை: நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் குற்றச்செயலை தடுக்க முயன்றபோது ஆசிட் வீச்சில் காயமடைந்த காவலர்கள் இருவருக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்த பொதுமக்கள் 13 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கவும் முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் சாமுவேல் என்பவர் ஆசிட் வீசியதில் எஸ்எஸ்ஐ முருகானந்தம், தலைமைக்காவலர் கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள் 13 பேர் காயமடைந்தனர். இரண்டு போலீசாருக்கும் தலா ரூ.1 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர்களின் மருத்துவ செலவையும் தமிழக அரசு ஏற்கும் என தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags : guards ,acid attack ,CM ,Namakkal Namakkal , Namakkal, CM, Sponsored
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா