×

ராஜஸ்தானின் கோட்டா அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு

ஜெய்ப்பூர்: கோடா என்ற இடத்தில் செயல்பட்டுவரும் ஜேகே லான் அரசு மருத்துவமனையில் கடந்த  மாதம் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். பாஜ ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தில் கடந்தாண்டு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தடுக்க தவறியதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக சாடின.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், கோடா மாவட்டத்திலும் தற்போது இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள ஜே.கே. லோன் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தொடர்ந்து இறந்து வருகின்றன. ஆக்சிஜன் குறைபாடு, சுகாதார வசதிகள் இல்லாததால் ஏற்படும் தொற்று நோய்களால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் தொடர்ந்து இந்த உயிர் பலி ஏற்பட்டு வருகிறது.

இந்த பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 9 குழந்தைகள் இறந்தன. தேசிய அளவில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி ஆராய்வதற்காக மத்திய அரசு மருத்துவக் குழுவை அனுப்பி வைக்க நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு 107-ஆக அதிகரித்துள்ளது. ஜே.கே.லான் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பரிவில் இருந்த குழந்தைகள் இன்று உயிரிழந்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்டவர்களை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

Tags : Rajasthan ,Kota Government Hospital ,107 Kota Hospital ,JK Lawn Government Hospital ,Pachilam Children ,Jaipur , Kota Hospital, JK Lawn Government Hospital, Child Mortality, Rajasthan, Pachilam Children, Jaipur
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...