×

சென்னையில் கடும் பனிமூட்டம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி : ஐதராபாத், திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட 5 விமானங்கள்

சென்னை: கடும் பனி மூட்டத்தால் சென்னை வரவிருந்த 5 விமானங்கள் ஐதராபாத், திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மஸ்கட், ஆஸ்திரேலியா, டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானங்கள் ஐதராபாத், திருவனந்தபுரத்துக்கு திருப்பி விடப்பட்டன. கடும் பனி மூட்டத்தால் சென்னை மட்டுமின்றி நாகை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களிலும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வட மாநிலங்களிலும், தலைநகர் டெல்லியிலும் அடிக்கும் கடும் குளிரும், பனியும் மக்களை பாடாய்படுத்தி வருகிறது.

டெல்லியில் 118 ஆண்டுகளில் இல்லாத வகையில், 1.9 டிகிரி செல்சியஸ் முதல் 2.4 டிகிரி செல்சியஸ்  வரை கடும் குளிர் நிலவுவதால் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு கடுமையான பனி நிலவுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் குறைந்த அளவே இருந்த பனி இன்று கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலைகள் சரியாக தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி செல்கின்றனர். கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னைக்கு வரவிருந்த சில விமானங்கள் திருப்பி விடப்பட்டன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்படவிருந்த சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இன்னும் சில நாட்கள் பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Thiruvananthapuram ,Suburbs ,Germany ,Airline , Snow, Heavy Snow, Airline, Flights, Chennai, Suburbs
× RELATED கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில்...