×

பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட விதிகள் புகுத்தப்படுகின்றன; முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

சென்னை: பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட விதிகள் புகுத்தப்படுகின்றன என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நெல்லை கண்ணன் கைது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன என்றார். பேசுவதே குற்றம் என்று வைத்துக் கொண்டாலும் அதற்கு ஏன்? 14 நாள் விசாரணை கைதியாக சிறையில் அடைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும் என்றும், அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். பேச்சும், செயலும் இணைந்தால் தான் குற்றம் என்று குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம் நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக் கொண்டாலும் என்ன தீய செயலை அவர் செய்தார் என்று வினவியுள்ளார்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விமர்சித்து பேசியதாக கைதான பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணனை வரும் 13ம் தேதி வரை சிறையில் அடைக்க நெல்லை நீதிபதி  நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். சேலம் சிறைக்கு அவரை கொண்டு செல்லும் வழியில், மதுரை வந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே நேற்று முன்தினம் இரவில் நெல்லை கண்ணனை மதுரை மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர். இங்குள்ள சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags : P. Chidambaram ,Nellai Kannan , P. Chidambaram, Nellai Kannan, Speaking of crime
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி