×

நிலப்பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் நுங்கம்பாக்கம் சர்வேயர் அதிரடி கைது

* தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு சோதனை
* 2.74 லட்சம் பறிமுதல்

சென்னை: நிலத்திற்கு பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது நுங்கம்பாக்கம், எழும்பூர் சர்வேயர் ஜானகிராமை லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறிவைத்து கைது செய்தனர். அதேபோல் தமிழகம் முழுவதும்  3 அரசு அலுவலகங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2.74 லட்சம் மற்றும் தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (38), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், எழும்பூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது நிலத்திற்கு பட்டா வழங்க மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட நுங்கம்பாக்கம், எழும்பூர் சர்வேயர் ஜானகிராம், மனுவை பரிசீலனை செய்ய ரூ.5 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சரவணன் பணத்தை கொடுப்பதாக உறுதி அளித்திருந்தார். இதுகுறித்து சரவணன் லஞ்ச ஒழிப்புத்துறையில் சம்பவம் குறித்து புகார் அளித்ததார். அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை சர்வேயர் ஜானகிராமிடம் கொடுக்கும்படி சரவணனிடம் கொடுத்தனர்.

சரவணன், ேநற்று எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் ஜானகிராமிடம் லஞ்சப்பணம் ரூ.5 ஆயிரத்தை கொடுக்கும் போது, அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக சர்வேயரை பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், கிண்டியில் உள்ள தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.96 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, வேலூர் மின் வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.1.53 லட்சம் பணம், 48 கிராம் கொண்ட 11 தங்க நாணயம், 22 கிராம் கொண்ட 2 வெள்ளி நாணயம் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை வணிக வரித்துறை அலுவலகத்தில் உள்ள இணை கமிஷனர் அறையில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.25 ஆயிரம் பணம், 4 கிராம் கொண்ட 1 கிராம் தங்க நாணயம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில் நேற்று மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரூ.2.74 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர்.

Tags : Nungambakkam Surveyor ,Rs , Nungambakkam Surveyor,arrested ,ribing Rs 5000
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...