×

பதிவானது 4,989; எண்ணியது 4,992 அதிமுக வேட்பாளருக்கு விழுந்த 3 மர்ம ஓட்டுகள் : பழநியில் பரபரப்பு

பழநி:பழநியில் அதிமுக வேட்பாளர் முறைகேடாக வெற்றிபெற்றதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி ஊராட்சி ஒன்றியம் 12வது வார்டில் அதிமுகவை சேர்ந்த ஒன்றியச் செயலாளர் முத்துசாமி போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுகவை சேர்ந்த ரங்கத்துரை போட்டியிட்டார். நேற்று  முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதியில் திமுக வேட்பாளர் ரங்கத்துரை 2,307 ஓட்டுக்கள் பெற்றார். அதிமுக வேட்பாளர் முத்துசாமி 2,311 ஓட்டுக்கள் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எடுத்துக்கொள்ளப்பட்ட மொத்த வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே 3 ஓட்டுக்கள் வித்தியாசம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக திமுக வேட்பாளர், தேர்தல் அலுவலரான பழநி சப்-கலெக்டர் உமாவிடம் முறையிட்டார். அதிமுகவினரும் ஏராளமானோர் சப்-கலெக்டர் அறையில் குவிந்தனர். மாலை 4 மணிக்கு துவங்கிய சர்ச்சை நேற்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது. கலெக்டருடன் கலந்தாலோசித்த சப்-கலெக்டர் உமா இறுதியில் அதிமுக ஒன்றியச் செயலாளர் முத்துசாமி வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதுகுறித்து திமுக வேட்பாளர் ரங்கத்துரை கூறுகையில், ‘‘எங்களது ஊராட்சி ஒன்றியக்குழு பகுதிக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 4,989 ஆகும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு கணக்கு பார்த்தால் 4,992 ஓட்டுக்கள் வருகிறது. சர்ச்சைக்குரிய 3 ஓட்டுகள் எப்படி கணக்கில் சேர்க்கப்பட்டது என்பது தெரியவில்லை’’ என்றார்.

Tags : Candidate ,AIADMK , Record 4,989; Counted 4,992, AIADMK candidate, 3 Mysterious Tales That Fall: The Oldest Thriller
× RELATED செலவு செய்ய பணமில்ல… பூரி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்