×

வருமானத்திற்கு அதிகமாக 2.60 கோடி சொத்து குவிப்பு : சுங்கத்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்கு பதிவு

சென்னை: சூளைமேடு வீரபாண்டி நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவர், ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2011 மற்றும் 2019ம் ஆண்டு பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக தனது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் வீடுகள் மற்றும் வங்கி இருப்பு என  2.60 கோடி மதிப்புள்ள அசையா மற்றும் அசையும் சொத்துகள் வாங்கி குறித்து இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முனுசாமி சொத்துகள் சேர்த்து இருப்பதால் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

அதேபோல், பெசன்ட் நகரில் உள்ள வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பாபு பிரசாந்த் குமார் என்பவர், பொய் கணக்கு காட்டும் நபர்களிடம் வருமான பிடித்தம் செய்ததில் ரூ.2.38 கோடி தனது வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்ததாக வருமான வரித்துறை உதவி கமிஷனர் அஞ்சனா கொடுத்த புகாரின்படி சிபிஐ வருமான தீர்ப்பாய அலுவலக கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Tags : CBI ,Customs officer , CBI files case ,Customs officer
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...