×

கணினி பயிற்றுநர் பணி 8ம்தேதி சான்று சரிபார்ப்பு

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் கிரேடு 1 பணிக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. இந்த தேர்வுக்கான மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிகளின் அடிப்படையில் சான்று சரிபார்ப்புக்கான விவரப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் கடந்த நவம்பர் 28ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டியவர்கள் உரிய சான்றுகளை பதிவேற்றம் செய்ய கடந்த டிசம்பர் 5ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு சான்றுகளை பதிவேற்றம் செய்யாதவர்கள், தகுதியற்றவர்கள் தவிர மற்றவர்களுக்கு தற்போது 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் சான்று சரிபார்ப்பு சென்னையில் நடக்கிறது.


Tags : Computer Instructor, Task 8
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை,...