×

திருவொற்றியூர் நவீன எரிவாயு தகன மேடை அருகே சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் கனரக லாரிகளால் மக்கள் அவதி: கண்டுகொள்ளாத போலீசார்

திருவொற்றியூர்:  திருவொற்றியூர் எண்ணூர்  விரைவு சாலையில் எரிவாயு தகன மேடை அருகே சர்வீஸ் சாலையில் கனரக லாரிகள் நிறுத்தப்படுவதால், இறந்தவர்களின் சடலத்தை சுமந்து வரும் பொதுமக்கள் விபத்துக்குள்ளாகின்றனர் திருவொற்றியூர் எண்ணூர் விரைவுச்சாலை, பட்டினத்தார் கோயில் தெரு அருகே நவீன எரிவாயு தகன மேடை உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது கே.பி.பி.சாமி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ₹55 லட்சத்தில் நவீன வசதிகளுடன் இந்த தகன மேடை கட்டப்பட்டது. தற்போது மாநகராட்சி இந்த நவீன எரிவாயு தகன ேமடையை பராமரித்து வருகிறது.  இந்நிலையில் இந்த எரிவாயு தகன மேடையை  ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் துறைமுகத்துக்கு செல்ல வேண்டிய கனரக  லாரிகள் வரிசையாக நிறுத்தப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை சுமந்து வரும் உறவினர்கள் எளிதாக தகன மேடைக்கு செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கும், மண்டல அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இந்த எரிவாயு தகனமேடை அருகே சர்வீஸ் சாலையில் ஏராளமான கண்டெய்னர் லாரிகள் நிறுத்தப்படுகிறது. இதனால் இங்கு இறந்தவரின் சடலத்தை சுமந்து வர  சிரமம் ஏற்படுவதோடு, லாரிகளின் இடுக்கில் நடந்து வருவதால்  விபத்து ஏற்படுகிறது. எனவே நவீன எரிவாயு தகன மேடை அருகே சர்வீஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு நிறுத்தும் லாரி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : service road ,gas fire station ,Thiruvottiyur , Thiruvottiyur, modern gas crematorium, service road, heavy trucks
× RELATED நெற்குன்றம் அருகே சொகுசு காரில் கடத்திய 1 டன் குட்கா பறிமுதல்