×

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரை ஜன.31 முதல் தொடங்க பரிசீலனை: ஏப்ரல் வரை நடக்கும்?

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரை வரும் 31ம் தேதி முதல் தொடங்குவது பற்றி மத்திய அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2வது முறையாக ஆட்சி அமைத்து 7 மாதங்களாகின்றன. இது, ஏற்கனவே தனது முதல் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டது. நாட்டின் முதல் முழு நேர நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், இதை தாக்கல் செய்தார். தற்போது அவர் தனது 2வது பட்ஜெட்டை தீவிரமாக தயாரித்து வருகிறார். நாட்டில் பொருளாதார மந்தைநிலை ஏற்பட்டு, பொருளாதார வளர்–்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்த பட்ஜெட் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 31ம் தேதி முதல் தொடங்குவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மத்திய பொது பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் விரைவில் கூடி, பட்ஜெட் தொடர் தேதியையும், பட்ஜெட் தேதிகளை முடிவு செய்து அரசுக்கு பரிந்துரைக்கும். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். அதே நாளில் பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தெரிகிறது.

73 மாநிலங்களவை எம்பி. பதவிக்கு இந்தாண்டு தேர்தல்
மாநிலங்களவையின் மொத்தம் எம்பி.க்களின் எண்ணிக்கை 250. இவர்களில் பாஜ எம்பி.க்கள் 18 பேர், மேலும் காங்கிரசை சேர்ந்தவர்கள் உட்பட 69 மாநிலங்களவை எம்பி.க்கள் இந்தாண்டு ஓய்வு பெறுகின்றனர். ஏற்கனவே, 4 இடங்கள் காலியாக உள்ளன. ஆக மொத்தம் 73 இடங்கள் இந்தாண்டு நிரப்பப்பட வேண்டும். மாநிலங்களவையில் பெரும்பான்மையை நோக்கி பா.ஜ சென்று கொண்டிருந்தது. ஆனால், 2018-19ம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்கள் சிலவற்றில் பாஜ தோல்வியடைந்தது. அதனால், இந்த தேர்தலில் பாஜ.வுக்கு ஆதாயம் கிடைக்காது என கூறப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சில மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வென்றதால், காங்கிரஸ் கட்சியின் பலம் மேலும் சற்று உயரும் வாய்ப்புள்ளது.


Tags : Parliamentary ,budget series , Parliamentary budget series t
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...