×

நீங்கள் இந்திய பிரதமரா? அல்லது பாக்.கின் தூதரா? மோடிக்கு மம்தா கேள்வி

சிலிகுரி: ‘இந்தியாவை ஏன் எப்போதும் பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறீர்கள்?’ என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார். மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட மக்கள் அவர்களின் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்பது அவமானமாக இருக்கிறது. இந்தியா கலாச்சாரம், பாரம்பரியமிக்க மிகப்பெரிய நாடு. பிரதமர் மோடி தொடர்ந்து இந்தியாவை ஏன் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பேசுகிறார்? நீங்கள் இந்திய நாட்டுக்கு பிரதமரா? அல்லது பாகிஸ்தானுக்கு தூதரா? ஏன் அனைத்து விவகாரத்திலும்  பாகிஸ்தானை குறிப்பிடுகிறீர்கள்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவது  தொடர்பாக பாஜ அரசானது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.  ஒருபுறம் பிரதமர் மோடி, தேசிய குடிமக்கள் பதிவேடு இல்லை என்று கூறுகிறார். மற்றொரு புறம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்று கூறுகிறார். மக்கள் எதை ஏற்பது?  தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பாஜ தலைவர்கள் முரண்பாடான அறிக்ககைளை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : India ,Mamata ,Modi , Prime Minister of India, Ambassador of Pakistan, Modi, Mamta
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி