×

சாவர்க்கர்-கோட்சே பற்றி சர்ச்சை கருத்து காங்கிரஸ் மீது பாஜ சிவசேனா பாய்ச்சல்

புதுடெல்லி:  மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் சேவா தளத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் இந்தி ைகயேடு புத்தகம் விநியோகம் செய்யப்பட்டது. இதில். வீர சாவர்க்கரும், காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவும் தகாத உறவை வைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதற்கு, சிவசேனாவும், பாஜ.வும் கருத்து வேறுபாடுகளை மறந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  டெல்லியில் பாஜ பொதுச்செயலாளர்  அனில் ஜெயின் அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் தலைவர்களின் பல்வேறு உறவுகள் குறித்து இந்த உலகத்துக்கு நன்கு தெரியும். இந்துத்துவா வாதியான வீர சாவர்க்கர் போன்றவர்களால் காங்கிரசை சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை. அவரை விமர்சிப்பதற்காக காங்கிரஸ் தரம் தாழ்ந்து  சென்றுள்ளது. அருவருக்கத்தக்க கருத்து கூறியதற்கு காங்கிரஸ் பதில் கூறியே ஆக வேண்டும்,’’ என்றார்.


Tags : Shiv Sena ,Baja ,Congress ,Savarkar-Gotze Savarkar-Gotze , Savarkar, Gotze, Congress, Baja Shiv Sena
× RELATED இந்தியாவை ஆட்டிப் படைத்து கொரோனா...