×

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் 11 மாநில முதல்வர்களுக்கு பினராய் விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்படி மேற்கு வங்கம், டெல்லி உட்பட 11  மாநில முதல்வர்களுக்கு ேகரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராய் விஜயன் தீர்மானம் நிறைவேற்றினார். தற்போது, இதற்கு ஆதரவு திரட்டும் வகையில், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரா, புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய பாஜ ஆளாத 11 மாநிலங்களின் முதல்வர்களுக்கு பினராய் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், ‘வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது நாட்டின் அடிப்படை தத்துவம். ஆனால், சில சக்திகள் ஒற்றுமையாக வாழும் மக்களிடம் பிரவினை வாதம் என்ற விஷத்தை விதைக்கின்றன. இதை அனுமதிக்கக் கூடாது. ஜனநாயகத்தையும், மதசார்பின்மையையும், பாதுகாக்க வேண்டியது இந்த காலத்தின் கட்டாயமாகும்.

எல்லா கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு சமூக நன்மைக்காக ஒன்று சேர்ந்து ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் தயாராக வேண்டும். தற்ேபாது ஏற்பட்டுள்ள இந்த சிக்கலை அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்கொள்ள வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டசபையில் கடந்த 31ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இதுபோல், அனைத்து மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி செய்தால் மத்திய அரசு தனது முடிவை மாற்ற வாய்ப்பு உள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் கருத்துக்கு தலைவர்கள் எதிர்ப்பு
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கேரள பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘கேரள சட்டசபையின் தீர்மானம் சட்டரீதியாக செல்லாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்க மாநில சட்டசபைக்கு எந்த அதிகாரமும் கிடையாது,’ என்று கூறியுள்ளார். ஆளுநரின் இந்த கருத்துக்கு மாநில சட்டத்துறை அமைச்சர் பாலன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Tags : Pinarayi Vijayan ,Pinaray ,state chiefs , Citizenship Act, 11 State Chief Ministers, Pinarayi Vijayan
× RELATED கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து