மாடலிங் பெண் கொலை சவுதிக்கு தப்பி வந்த சகோதரன் பாகிஸ்தானிடம் ஒப்படைப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியை சேர்ந்த மாடல் பவுசியா அசீம் (26). குவாண்டீல் என அழைக்கப்பட்ட இவர், தனது கவர்ச்சியான வீடியோக்களை சமூகதளங்களில் வெளியிட்டு பிரபலம் அடைந்தார். இது முஸ்லிம் மத வழக்கத்துக்கு எதிரானது என்பதால், அவரது சகோதரர் வாசிம் கான், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குவாண்டீலை கழுத்தை நெரித்து கடந்த 2016ம் ஆண்டு கொலை செய்தார். அதன்பின், அவர் தப்பியோடி விட்டார்.  இந்நிலையில், சவுதியில் உள்ள இன்டர்போல் போலீசார் வாசிம் கான் மற்றும் அவரது சகோதரர் முசாபர் இக்பாலை சமீபத்தில் கைது செய்தது. நேற்று அவர்களை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது. 

Related Stories:

>