×

2வது டெஸ்டில் இங்கிலாந்து திணறல்

கேப் டவுன்: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறியது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. கிராவ்லி, சிப்லி இருவரும் இன்னிங்சை தொடங்கினர். கிராவ்லி 4 ரன்னில் வெளியேறினார். சிப்லி 34, கேப்டன் ஜோ ரூட் 35, டென்லி 38 ரன்னில் பெவிலியன் திரும்பினர். பென் ஸ்டோக்ஸ் 47, பட்லர் 29 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்துள்ளது (89 ஓவர்). ஓல்லி போப் 56 ரன், ஆண்டர்சன் 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Tags : England ,Test , 2nd Test, England, South Africa
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது