×

ஹரிகேன்சை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்

ஹோபர்ட்: பிக் பாஷ் டி20 லீக் தொடரில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியுடன் நேற்று மோதிய பிரிஸ்பேன் ஹீட் அணி 31 ரன் வித்தியாசத்தில் வென்றது. பெல்லரீவ் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஹோபர்ட் முதலில் பந்துவீசியது. பிரிஸ்பேன் ஹீட் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன் குவித்தது. பான்டன் 8, பிரையன்ட் 65 ரன் (36 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), ரென்ஷா 30 ரன் (17 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து வெளியேறினர். கேப்டன் கிறிஸ் லின் 88* ரன் (55 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), பென் கட்டிங் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய ஹரிகேன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்து, 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஜார்ஜ் பெய்லி 28, ஜுவெல், ரோஸ் தலா 27, டார்சி ஷார்ட் 25, கேப்டன் மெக்டர்மாட், டேவிட் மில்லர் தலா 23 ரன் எடுத்தனர். கிறிஸ் லின் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Tags : Brisbane Heat ,Hurricanes , Hurricanes Team, Brisbane Heat
× RELATED மீட்பு, நிவாரணம் மற்றும் மறு...