×

ரூபாய் மதிப்பு கடும் சரிவு

மும்பை: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, நேற்று முன்தினம் 16 காசு சரிந்தது. இரண்டாவது நாளாக நேற்று 42 காசு சரிந்தது.  அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காஸ்சிம் சுலைமானி கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர் ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து, ஒரு பேரல் 69 டாலராக இருந்தது. இது ரூபாய் மதிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. நேற்று காலை வர்த்தகம் துவங்கியபோதே ரூபாய் மதிப்பு கடும் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 42 காசு சரிந்து 71.80 ஆக இருந்தது. இது கடந்த ஒன்றரை மாதங்களுக்கு பிறகு ஏற்பட்ட கடும் சரிவாக பார்க்கப்படுகிறது.  இதுபோல், பங்குச்சந்தைகளும் சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 162.03 புள்ளி சரிந்து 41,464.61 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 55.55 புள்ளி சரிந்து 12,226.65 ஆகவும் இருந்தது.

Tags : collapse , Rupee value, decline
× RELATED தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த...