×

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

மும்பை: அந்நிய செலாவணி கையிருப்பு, கடந்த மாதம் 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 45,746 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தை விட, 252 கோடி டாலர் உயர்ந்துள்ளது.  யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பு, டாலரின் வெளி மதிப்பில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதனால் டாலரில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப கையிருப்பு மாறுபடுகிறது.   மேற்கண்ட வாரத்தில், வெளிநாட்டு கரன்சி மதிப்பு 220.3 கோடி டாலர் உயர்ந்து 42,493.6 கோடி டாலராக இருந்தது.  தங்கம் கையிருப்பு 26 கோடி டாலர் உயர்ந்து 2,739.2 கோடி டாலராக ஆகியுள்ளது. அதேநேரத்தில் சர்வதேச நிதியத்தில் கையிருப்பு 20 லட்சம் டாலர் குறைந்து 144.1 கோடி டாலர் ஆகியுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Tags : foreign exchange reserves
× RELATED தங்கம் விலை சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது