×

மார்த்தாண்டம்-வில்லுக்குறி சாலை ரூ.23 கோடியில் சீரமைப்பு: வசந்தகுமார் எம்பி தகவல்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் போக்கு வரத்துக்கு லாயக்கற்ற வகையில் காணப்படுகின்றன. குறிப்பாக கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையும், காவல்கிணறு முதல் பார்வதிபுரம் உள்ள தேசிய நெடுஞ்சாலையும் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க கோரி திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்த நிலையில் முதல் கட்டமாக மார்த்தாண்டன் முதல் வில்லுக்குறி வரை சாலை அமைக்கும் பணி தொடங்க உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள ஒழுகினசேரி சுடுகாடு சாலை சீரமைக்கும் பணியை வசந்தகுமார் எம்பி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: மார்த்தாண்டம் முதல் வில்லுக்குறி வரை முதற்கட்டமாக ரூ. 23 கோடி செலவில் சாலை சீரமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணி நாளை (இன்று) மார்த்தாண்டத்தில் நான் தொடங்கி வைக்கிறேன். அடுத்த கட்டமாக பார்வதிபுரம் முதல் காவல்கிணறு வரை ரூ.16 கோடி செலவில் சாலை அமைக்கப்பட உள்ளது என்றார். வசந்தகுமார் எம்பியுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜோசப் ராஜ், ஆனந்த், தவசிமுத்து தட்சிணாமூர்த்தி, பூபதி ஆகியோர் சென்றனர்.

Tags : Marthandam-Villukkuri ,Vasanthakumar , Vasanthakumar
× RELATED பொள்ளாச்சி பாலியல் வழக்கு கூடுதல்...