×

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு : மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என இரண்டிலுமே திமுக ஆதிக்கம்

சென்னை : இரண்டு நாட்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றும், இன்றும் 2 நாள்கள் எண்ணப்பட்டன. மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 513 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 512க்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி அதிமுக கூட்டணி 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் அதிமுக மட்டும் 213 இடங்களை கைப்பற்றியுள்ளது.

திமுக கூட்டணி 270 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் திமுக மட்டும் 247 இடங்களை கைப்பற்றியுள்ளது.5,067 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், அதிமுக கூட்டணி 2,136 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் அதிமுக மட்டும் 1,797 இடங்களை கைப்பற்றியுள்ளது.திமுக கூட்டணி 2,356 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதில் திமுக மட்டும் 2,110 இடங்களில் வென்றுள்ளது.ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி, 95 இடங்களை கைப்பற்றியுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி ஓரிடத்தில் வென்றுள்ளது.

Tags : Union Councilor ,DMK ,District Councilor ,Rural Local Elections ,Local Council Election , Vote count, local election, DMK, dominance
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...