×

ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வெற்றியை எதிர்த்து சாலைமறியல்: வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக புகார்

பெரம்பலூர்:  பெரம்பலூர் ஆலத்தூர் ஊராட்சியத்துக்கு உட்பட்ட அல்லிநகரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட மருதமுத்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதே பதவிக்கு போட்டியிட்ட பழனிவேல் என்பவர் மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டார்.  பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பாலூர், வேப்பூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கிறது.  இதில் 121 ஊராட்சி மன்ற  தலைவர் பதவியிடங்கள்  உள்ளனர்.  இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக  உள்ளாச்சி தேர்தலில் ஆலத்தூர் ஒன்றியத்தில் 2 பேரும் மற்ற 3 ஒன்றியங்களில் தலா ஒருவர் என 5 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

மீதமுள்ள 116 ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்களுக்கு 300க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.  இந்நிலையில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 9 வார்டுகள் கொண்ட அல்லிநகர ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அந்த ஊராட்சிக்குட்பட்ட 4 கிராமங்களை சேர்ந்த 6 பேர் போட்டியிட்டுள்ளனர்.  இதற்கான தேர்தலில் ஊராட்சியை சேர்ந்த 2527 வாக்காளர்களில் 2123 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.  இந்த வாக்கு எண்ணிக்கை நேற்று பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  இதில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட அல்லிநகர கிராமத்தை சேர்ந்த மருத்துமுத்து என்பவர் 110 வாக்குகள் அதிகம்  பெற்று வெற்றிபெற்றதாக தேர்தல் அலுவலர்களால் அறிவிக்கப்பட்டுள்ளனது. இந்நிலையில் அல்லிநகர ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 6 வேட்பாளர்களில் ஒருவரான தோண்டப்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் மறுவாக்கு எண்ணிக்கை கூறி பெரம்பலூர் அல்லிநகரம் அருகே அரியலூர் புறவழிச்சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான முறையில் பேசினார். போராட்டத்தில் ஈடுபட்ட பழனிவேல் போராட்டத்தை கைவிடமறுத்து விட்டார்.  618 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்ததாக தெரிவித்த, வாக்கு எண்ணும் அலுவலர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு என்னை வெளியே அனுப்பிவிட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவருக்கு ஆதரவாக மருதமுத்துவை வெற்றிபெற்றதாக அறிவித்துள்ளார் என பழனிவேல் குற்றம் சாட்டினார்.  அதனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.  இதனால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பழனிவேல் தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை மேலே ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.  இதனையடுத்து அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை சமாதானம் செய்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என உறுதியளித்து, போலீசார் போராட்டத்தை கைவிடவைத்திருக்கின்றனர்.

Tags : panchayat leader ,Alathur ,roadside protest ,panchayat chief , Alathoor, Panchayat Chairman, Victory, Roadkilling, Dilemma, Complaint
× RELATED ஆதனூர் அரசு பள்ளி ஆண்டுவிழா