குடியரசுதின அணிவகுப்பில் மேற்கு வங்கத்தை தொடர்ந்து, கேரள அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு

டெல்லி: குடியரசுதின அணிவகுப்பில் மேற்கு வங்காளம், மராட்டியத்தை தொடர்ந்து கேரள அரசு அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மராட்டியம், பீகார், ஜார்க்கண்ட், நாகலாந்த், மணிபூர், அருணாசலப்பிரதேச ஊர்திக்கும் இடம் மறுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டங்களில்,  மத்திய அமைச்சகங்கள், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பது வழக்கம். டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் சார்பில் 32 அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தன.

அதுபோல மத்திய மந்திரிகளும் 24 வகையான அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதில் 16 ஊர்திகள் மாநில அலங்கார ஊர்திகள், மத்திய மந்திரிகள் சார்பில் 6 ஊர்திகள் என மொத்தம் 22 அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசு சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மேற்குவங்காளம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், மத்திய அரசு திட்டமிட்டு மேற்கு வங்காள அலங்கார ஊர்தியை புறக்கணிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல் மராட்டியத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்த நிலையிலும் கேரள மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Tags : West Bengal ,Republican , Republican march, West Bengal, Kerala decorations, central government denial
× RELATED டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை...