×

எண்ணெய் வித்துகள் சாகுபடியில் சாதனை படைத்ததற்காக பிரதமர் மோடி தமிழக அரசுக்கு விருது

புது டெல்லி:  எண்ணெய் வித்துகள் சாகுபடியில், சாதனை படைத்ததற்காக  பிரதமர் மோடி  தமிழக அரசுக்கு விருது வழங்கியுள்ளார்.  க்ரிஷி கர்மாண்  தமிழகத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க, அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.  இதற்காக, மத்திய அரசும் பல்வேறு திட்டங்களின் கீழ்,  நிதி உதவி வழங்குகிறது.  இந்த நிதியில், விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்கப்படுவதால், பயிர் சாகுபடி, ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது.  பயிர் சாகுபடியில் சாதனை படைக்கும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு, க்ரிஷி கர்மாண் விருது வழங்கி வருகிறது.  சாதனை அந்த வகையில், முந்தைய சாகுபடி பருவத்தில், எண்ணெய் வித்துகள் சாகுபடியில் சாதனை படைத்ததற்காக தமிழகத்திற்கு, க்ரிஷி கர்மாண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலம், தும்கூரில்  நடந்த விழாவில், இந்த விருதை, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக அரசிற்கு வழங்கினார். விருதை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து பெற்றுக் கொண்டார். இதற்காக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோரும் கர்நாடகா சென்றுள்ளனர்.  தமிழகம் இவ்விருதை 5வது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : state ,Modi , Oil Seed, Cultivation, Adventure, PM Modi, Award
× RELATED உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு