×

மேலூர், கமுதி ஒன்றிய ஊராட்சி தலைவர் தேர்தலில் 79, 73 வயது மூதாட்டிகள் வெற்றி

மேலூர் : மேலூர் ஒன்றியத்தில் 79 வயது, கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் 73 வயது மூதாட்டிகள், ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றியத்தில் உள்ள அரிட்டாபட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 4 பெண்கள் உட்பட 7 பேர் போட்டியிட்டனர். இதில் 6 பேர் இளம் வயது போட்டியாளர்கள். இவர்களுடன் வீரம்மாள் என்ற 79 வயது மூதாட்டியும் களத்தில் இறங்கினார்.

கணவரை இழந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 முறை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த இவர், மூன்றாவது முறையாக இந்த தேர்தலில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட 6 பேரையும் தோற்கடித்து, தனக்கு அடுத்தப்படியாக வந்த வேட்பாளரை விட 195 வாக்குகள் அதிகம் பெற்று இவர் வெற்றி பெற்றார்.  வெற்றி பெற்று திரும்பிய மூதாட்டி வீரம்மாளை அவரது உறவினர்கள் மற் றும் கிராம மக்கள்மாலை அணிவித்து வரவேற்றனர்.

கமுதி : ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம் அ.தரைக்குடி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்ட 73 வயது மூதாட்டி தங்கவேலு 562 வாக்குகள் பெற்று, 62 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Tags : granddaughters ,election ,Panchayat ,Kannur ,Head ,Tamilnadu Local Body Eelections , Tamilnadu Local body Eelections,Head of the Panchayat unions,Old womens,Melur, Kamuthi
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு