×

1 ரன் எடுக்க 39 பந்துகளை எடுத்துக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித்; கைதட்டி கிண்டல் செய்த ரசிகர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 296 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, அடுத்து மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்டில் 247 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், பர்ன்ஸ் களமிறங்கினர்.

பர்ன்ஸ் 18 ரன்களில் வாக்னர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய லபுசேன சிறப்பாக விளையாடி சதமடித்துள்ளார். இதனிடையே 45 ரன்களில் வார்னர் ஆட்டமிழக்க ஸ்மித் களமிறங்கினார். ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன் எடுக்க 38 பந்துகள் எடுத்துக் கொண்டார். இறுதியில் ஸமித் 182 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த போது கிராண்ட் ஹோம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்மித் ஒரு ரன் எடுத்த போது மைதானத்தில் இருந்த அனைவரும் கைதட்டி சிரித்தனர். ஐசிசியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எல்லோரும் கைதட்டுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.


Tags : Steve Smith ,Fans ,run ,New Zealand ,Australia , Test cricket, Australia, New Zealand, Steve Smith
× RELATED 1 ரன் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ்...