×

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலால் கச்சா எண்ணெய், தங்கம் விலை உயர்வு : சவரன் ரூ.30,344-ஐ எட்டி புதிய உச்சத்தை தொட்டது


சென்னை: ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலால் கச்சா எண்ணெய், தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரன் ரூ.456 அதிகரித்து ரூ.30,344-ஐ  எட்டி புதிய உச்சத்தை தொட்டது. அது போல சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 2 டாலர் உயர்ந்து 68.21 டாலரானது. ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் தளபதி உள்பட 7 பேர் உயிரிழந்த‌னர்.

தங்கம் பயன்பாட்டில் உலகளவில் முன்னிலையில் இருக்கும் இந்தியா ஆபரணங்கள் தயாரிப்புக்காகவே அதிகமான தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இறக்குமதிக்கு அதிகம் செலவிட நேரும்போது அதன் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் தங்கம் விலை உயர்த்தப்படுகிறது. 2020 தொடங்கியது முதல் தங்கம் விலை உயர்த்தப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் இன்றும் தங்கம் விலை ரூ. 30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.

ஆபரணத் தங்கத்தின் விலை

இன்று ( ஜனவரி 3) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.3,793 ஆக உள்ளது. நேற்றைய தினத்தில் இதன் விலை ரூ.3,736ஆக இருந்தது. நேற்றைய விலையிலிருந்து 57 ரூபாய் உயர்ந்துள்ளது .8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 29,888 ரூபாயிலிருந்து இன்று 30,344 ரூபாயாகச் உயர்ந்துள்ளது. அதாவது 456 ரூபாய் அதிகரித்துள்ளது.

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து 50.40 ரூபாயிலிருந்து 51.10 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 50,400 ரூபாயிலிருந்து 700 ரூபாய் அதிகரித்து 51,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : missile strike ,US ,Iraq , Jewelry, Gold, Silver, Price, Sale, Shaving, Crude Oil, Iraq, USA, Missile, Attack
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...