×

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதிமுக தலைவணங்கி ஏற்றுக்கொள்ளும்: ஓ.பி.எஸ் கருத்து

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பு எதுவாக இருப்பினும் அதனை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் புதிதாக பிரிக்கப்பட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது.  ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இரண்டாம் நாளாக இன்றும் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி நிலையில், விடிய விடிய தொடர்ந்து இன்றும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாவட்ட கவுனிலர் தேர்தலில் அதிமுகவை விட திமுக முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதனை அதிமுக தலைவணங்கி ஏற்றுக்கொள்ளும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பற்றி சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருகிறது. இந்நிலையில் தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் அனைத்து இந்திய அண்ணா முன்னேற்ற கழகத்தின் சார்பாக மக்கள் தீர்ப்பினை தலைவணங்கி ஏற்று கொள்கிறோம் என தெரிவித்தார்.


Tags : AIADMK ,OPS , Local election result, AIADMK, head-to-head acceptance, OPS opinion
× RELATED இரட்டை இலை சின்னம் வழக்கு இன்று விசாரணை..!!