×

பாக்தாக் விமான நிலையத்தில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்; ஈரான் ராணுவ தளபதி காசிம் சோலிமானி கொலை

பாக்தாக்: ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சோலிமானி உயிரிழந்துள்ளார். ஹஷீத் கிளர்ச்சியாளர்கள் குழுவின் துணைத் தலைவர் மஹாதி உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஹஷீத் கிளர்ச்சியாளர்கள் குழுவின் அபு மஹாதி ஈரான் ஆதரவுடன் இயங்கியதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் ஈராக் இடையே தற்போது மிகப்பெரிய அளவில் பிரச்சனை நிகழ்ந்து வருகிறது. ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் பல தற்போது அங்கு பாக்தத்தில் போர் செய்ய தயார் ஆகி வருகிறது. ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் ஏற்கனவே அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றி உள்ளது. இதனால் அமெரிக்க தூதரகம் அருகே பெரிய அளவில் அமெரிக்க ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை அமெரிக்க ராணுவ படை இரண்டு டிரோன் விமானங்கள் மூலம் ஈராக்கில் தாக்குதல் நடத்தியது. ஈராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே சென்ற இரண்டு வாகனங்களை தாக்கி அளித்தது. இதில் மொத்தம் 9 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர்தான் ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தத்க்கது. அதேபோல் ஈரான் மிலிட்டரி கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டார்.

வெள்ளை மாளிகை தகவல்


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரிலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. ஈராக்கில் தாக்குதல் நடத்திய பின் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க கொடியை டிரம்ப் பதிவிட்டுள்ளார். ஈராக்கில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரை தாக்க காசிம் சோரிமானி திட்டமிட்டிருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்கர்களை தாக்க திட்டமிட்டதால் காசிம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Tags : US ,Qasim Solimani ,Murder ,Baghdad airport ,Iranian ,Commander ,Iraq ,US Army ,Iran Army , Iraq, Baghdad Airport, Missile Attack, Iran Army Commander, Qasim Solimani, US Army
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!