×

28 ஓட்டில் அமமுக வெற்றி பெற்றதை எதிர்த்து மறு வாக்கு எண்ணிக்கை கோரிய அதிமுக நிர்வாகி திடீர் மனமாற்றம்: போன் அழைப்பால் திரும்பிச்சென்றார்

ராசிபுரம்: ராசிபுரத்தில், அமமுக வேட்பாளர் வெற்றி அறிவிப்பால் அதிர்ச்சிக்குள்ளான அதிமுக நகர செயலாளர் மறு வாக்கு எண்ணிக்கைக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து சிறிது நேரத்தில் மனம் மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்தில் மொத்தம் 9 வார்டுகள் அடங்கியுள்ளன. இதில், 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒன்றிய செயலாளரான காளியப்பன் போட்டியிட்டார். இதேபோல், அமமுக சார்பில் ராஜா களத்தில் குதித்தார். தொடக்கம் முதலே இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இவர்களில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், 18 வாக்கு வித்தியாசத்தில் அமமுக வேட்பாளர் ராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அதிமுகவினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதையடுத்து, நகர செயலாளரான பாலசுப்ரமணியம் வாக்கு எண்ணும் மைய அலுவலர்களிடம் சென்று மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென கேரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முறையாக தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.  அப்போது, செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், பேசியவர் கேட்டுக்கொண்டதின்பேரில், பாலசுப்ரமணியம் மனம் மாறினார். மறு வாக்கு எண்ணிக்கை எதுவும் வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். இதனால், வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : AIADMK ,referendum ,executive ,victory ,Phone call , Introvert, re-vote count, AIADMK administrator
× RELATED பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!