×

கோரிக்கைகளை வலியுறுத்தி 1000 அரசு மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா: ம.பி.யில் நோயாளிகள் பாதிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் பதவி, ஊதிய உயர்வு கொள்கைகளை வரையறுக்கவும், 7வது ஊதிய கமிஷன் பரிந்துரையின்படி கடந்த 2016 ஜனவரி முதல் பண பலன்களை அளிக்கவும் வலியுறுத்தி 6 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 1,000 அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவற்றை அரசு கண்டுக் கொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டி உள்ள அவர்கள், தங்கள் வேலையை நேற்று கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். மருத்துவத் துறை டீனுக்கு அவர்கள் அனுப்பிய கடிதத்தில், ‘எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து 9ம் தேதி முதல் பணியை ராஜினாமா செய்கிறோம்,’ என கூறியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மீதமுள்ள 2,300 அரசு மருத்துவர்களும் இன்று தங்கள் ராஜினாமா கடிதத்தை டீனுக்கு அனுப்ப உள்ளனர். இதனால், வரும் 9ம் தேதி முதல், மாநிலத்தில் உள்ள 13 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் ஒட்டு மொத்த உள், புற நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

Tags : Doctors ,Government , Request, 1000 Government Doctors, Resignation, MP, Patients, Impact
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...