செலவை குறைக்க நடவடிக்கை லோக்சபா, ராஜ்யசபா டிவி சேனல்களை இணைக்க குழு: வெங்கையா நாயுடு உத்தரவு

புதுடெல்லி: ஒளிபரப்பு செலவுகளை குறைப்பதற்காக, லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவி சேனல்களை ஒன்றாக இணைப்பதற்காக, 6 பேர் கொண்ட குழுவை வெங்கையா நாயுடு அமைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை, மாநிலங்களவைக்கு தனித்தனி டி.வி. சேனல்கள் உள்ளன. இதில் மக்களவை, மாநிலங்களவை கூட்டத்தில் நடக்கும் விவாதங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. நாடாளுமன்றம் நடைபெறாத நாட்களில் நாடாளுமன்ற விவகாரங்கள், தற்போதைய நிலவரங்கள் மற்றும் பயனுள்ள கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

இன்டர்நெட் மூலமாக யூ டியூப் சேனலிலும் ராஜ்யசபா டிவி நிகழ்ச்சிகளை மக்கள் பார்க்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை தற்போது 40 லட்சத்தை தாண்டியுள்ளது. இதற்காக மாநிலங்களவை ஊழியர்களுக்கு, மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், ‘லோக்சபா டிவி’, ‘ராஜ்யசபா டிவி’களை ஒன்றாக இணைக்க 6 உறுப்பினர்கள் கொண்ட குழுவையும் அவர் அமைத்துள்ளார். இதன் மூலம், நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்புவதற்கு ஏற்படும் செலவு குறையும் என தெரிவித்துள்ளார்.

Tags : Venkaiah Naidu ,Lok Sabha ,Rajya Sabha , Lok Sabha, Rajya Sabha TV, Channel, Connecting Group, Venkaiah Naidu, Directive
× RELATED நாளை உலக தாய்மொழி தினம்: 22 மொழிகளில்...