×

பாதுகாப்பு அளிக்க கேரள அரசு மறுப்பு ஜனாதிபதி கோவிந்தின் சபரிமலை பயணம் ரத்து

திருவனந்தபுரம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 5ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக  தகவல்கள் வெளியானது. அவர் பூஜை செய்வதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஹெலிபேட் அமைப்பதற்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு சபரிமலை சென்றது. அப்போது, ஹெலிபேட் அமைக்கும் அளவுக்கு நீர்த்தேக்க தொட்டி பலமானதாக இல்லை என்பது கண்டறியப்பட்டது. மேலும், ஜனாதிபதிக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர், எஸ்பி, அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், தற்போது மகர விளக்கு காலம் நடந்து வருவதால் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.

இந்த நேரத்தில் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு வசதிகளை செய்ய முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். இது பற்றி ஜனாதிபதி மாளிகைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சபரிமலை பயணத்தை ரத்து செய்துள்ளதாக ஜனாதிபதி மாளிகையில் இருந்து கேரள அரசுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. அதோடு, ஜனாதிபதியின் சுற்றுப் பயணமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 6ம் தேதி கொச்சி வரும் அவர், அன்று லட்சத்தீவுக்கு செல்கிறார். அங்கிருந்து 9ம் தேதி திரும்பி கொச்சியில் இருந்து டெல்லி திரும்புகிறார்.

Tags : Govind ,government ,Kerala , Defense, Kerala Government, Denial, President Govin, Sabarimala trip, cancellation
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...