தேசியவாத காங். மூத்த தலைவர் திரிபாதி மரணம்

புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.பி.திரிபாதி நேற்று மரணம் அடைந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் பொது செயலாளராக இருந்து வந்தவர் டி.பி. திரிபாதி. இவர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டெல்லியில் நேற்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே டிவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘கட்சியின் மூத்த தலைவர் டி.பி.திரிபாதி இறந்த செ்ய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவர் நமது அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தவர். நாம் அதை இழந்து விட்டோம்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

>