×

புலம் பெயர்ந்தவர்களுக்கான நிகழ்ச்சி பாக்.கில் பிறந்தவர் கோவா வர தடை: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

பனாஜி: கோவாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு என நடத்தப்படும் நிகழ்ச்சியில் பாகிஸ்தானில் பிறந்த இளைஞர் பங்கேற்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. `கோவாவை அறிவோம்’ என்ற நிகழ்ச்சியின் 12வது கூட்டம் கோவா, டெல்லி, ஆக்ரா ஆகிய இடங்களில் நாளை தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது. கோவாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதாவது, இந்தியாவை பூர்விகமாக கொண்ட பெற்றோர் அல்லது மூதாதையருக்கு பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் இதில் பங்கேற்கலாம். இந்நிலையில், நாளை தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, போர்க்சுக்கலை சேர்ந்தவர்கள் உள்பட 8 மாணவர்கள் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவரான பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலிய குடிமகனாக உள்ள மேர்கோ மோன்டெய்ரோ, இந்தியா வருவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகார இயக்குனர் அந்தோணி டிசவுசா கூறுகையில், ‘‘மேர்கோவின் தாத்தா ஜோஸ்மோன்டெய்ரோ கோவா தலைநகர் பனாஜியில் பிறந்தவர். மேர்கோ கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் 3ல் பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்தார். பின்னர், அங்கிருந்து தனது தாயுடன் ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் அவர் இந்தியா வருவதால் ஏற்படக் கூடிய, நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதனால், அவருடைய விண்ணப்பம் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Tags : Goa , Migrant, show, Pak, born, Goa, ban, security, threat
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...