தமிழக அரசுக்கு முத்தரசன் எச்சரிக்கை

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில், ஜனநாயக நெறி முறைகளுக்கு உட்பட்டு பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 60 ஆயிரம் பேர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கள் வீட்டு முற்றத்தில் கோலமிட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். இத்தகைய அடக்குமுறை நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருவது கடும் கண்டனத்திற்குரியது. எதேச்சதிகாரமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுமேயானால் அதற்குரிய எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Tags : Mutharasan ,government ,Tamil Nadu , Government of Tamil Nadu, Muttarasan, Warning
× RELATED சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கோரி...