×

சி ல் லி பா யி ன் ட்...

* அயர்லாந்து ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி: போலார்டு (கேப்டன்), அம்ப்ரிஸ், சேஸ், காட்ரெல், ஹெட்மயர், ஹோப், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கீமோ பால், கேரி பியரி, நிகோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்டு, ஹேடன் வால்ஷ் (ஹோல்டருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது).
* கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்தும் அனைத்து சாம்பியன்ஷிப் தொடரையும் கைப்பற்றும் அளவுக்கு வலிமையானது என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் பிரையன் லாரா கூறியுள்ளார்.
* இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை சுனிதா லாக்ரா (28 வயது), முழங்கால் மூட்டு காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக அவர் 139 போட்டிகளில் களமிறங்கி உள்ளார்.
* ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், சொந்த மண்ணில் தான் விளையாடும் டென்னிஸ் போட்டிகளில் போடும் ஒவ்வொரு ஏஸ் சர்வீசுக்கும் ₹10,000 நன்கொடையாக அளிக்க உள்ளதாக ஆஸி. நட்சத்திரம் நிக் கிரிஜியோஸ் அறிவித்துள்ளார்.



Tags : Li Pai Yin T ,Li , Li Pai Yin T ...
× RELATED சி ல் லி பா யி ன் ட்…