×

தண்டர்சை வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்

சிட்னி: பிக் பாஷ் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டர்ஸ் அணியை வீழ்த்தியது. சிட்னி ஷோகிரவுண்டில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சிட்னி தண்டர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்தது. அலெக்ஸ் ராஸ் அதிகபட்சமாக 40 ரன் எடுக்க, கேப்டன் பெர்குசன் 19, மாத்யூ கில்கெஸ் 28, அர்ஜுன் நாயர் 17* ரன் எடுத்தனர். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் ஹாரிஸ் ரவுப் 3, மேக்ஸ்வெல் 2, ஆடம் ஸம்பா, கிளின்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு மார்கஸ் ஸ்டாய்னிஸ் - நிக் லார்கின் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 123 ரன் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தது. ஸ்டாய்னிஸ் 58 ரன் (51 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), லார்கின் 65 ரன் (45 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாச, அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்னில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அந்த அணி 19.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தண்டர்ஸ் பந்துவீச்சில் டேனியல் சாம்ஸ் 3, கிறிஸ் மோரிஸ், நாதன் மெக்ஆண்ட்ரூ தலா 2 விக்கெட் எடுத்தனர். மெல்போர்ன் அணியின் நிக் லார்கின் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Tags : Melbourne Stars ,Thunder , Melbourne,Stars beat, Thunder
× RELATED அபிஷேக் நாமா இயக்கும் மாயாஜால படம் நாகபந்தம்